லண்டன்: இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாக கூறி அரசு தடை செய்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதை கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார். பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன் என்ற போராட்டக்குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
