காரைக்கால் டூ புதுச்சேரி வரை கள்ளக்காதல் எஸ்.பி.யுடன் பெண் காவலர் நிர்வாண வீடியோ கால்: போலீஸ் கணவர் கண்டுபிடித்ததால் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி காரைக்காலில் பணியாற்றியபோது பெண் காவலருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர், அந்த அதிகாரி புதுச்சேரிக்கு வந்தும் பெண் காவலருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி காதலை தொடர்ந்தார். இதை பெண் காவலரின் கணவர் கண்டுபிடித்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் திருமணமான பெண் காவலர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அங்கு ஏற்கனவே பணியாற்றிய எஸ்.பி அந்தஸ்த்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவருக்கும், அந்த பெண் காவலருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த உயர் அதிகாரி கடந்த 2 மாதங்களுக்கு முன் புதுவைக்கு மாற்றலாகி வந்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் செல்போன் மற்றும் வாட்ஸ்அப்பில் பேசியும், நிர்வாணமாக வீடியோ காலில் பார்த்து வந்ததும் தெரிகிறது.

பெண் காவலர் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததால் சந்தேகமடைந்த அவரது கணவர், அவரும் காவலர் என்பதால் மனைவியின் செல்போன் எண் கால் பதிவுகளை சோதனை செய்த போது உயர் அதிகாரியிடம் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் பெண் காவலருக்கு தெரியாமல் அவரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்ததில் நிர்வாண வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரைக்கால் சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யாவிடம் அந்த வீடியோக்களை காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரியிடம் நெருக்கமாக இருந்த விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டதால் மனமுடைந்த அந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுவைக்கு மாற்றலாகி வந்த உயர் அதிகாரி தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார். இந்த சம்பவம் புதுச்சேரி காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: