×

வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி

*ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மனுக்கு பொதுமக்கள் நன்றி

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் நீண்ட நாட்களாக சுத்தப்படுத்தப்படாத வாறுகாலை வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதி, ராஜபாளையம் சாலையில் உள்ள பகுதியில் வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளன. அந்த பகுதியில் உள்ள வாறுகால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சுத்தப்படுத்தாததால் மழைநீர் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனவே வாறுகாலை உடனடியாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கவுசல்யாவிடம் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று உடனடியாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் கடந்த வியாழக்கிழமை இரவு வாறுகால் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கவுசல்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஒரேநாள் இரவில் வாறுகாலை சுத்தப்படுத்தினர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏவிற்கும், நகராட்சி சேர்மன் கவுசல்யாவிற்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Sankarankovil ,Raja MLA ,Municipal Chairman ,Rajapalayam… ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...