×

வனச்சாலையில் இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம்

அந்தியூர்,டிச.22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தமிழக-கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு பர்கூர், தட்டகரை ஆகிய வனச்சரகங்கள் உள்ளது. இதில் பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாமரைக்கரையிலிருந்து ஈரெட்டி செல்லும் ரோட்டில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஈரெட்டி பகுதியில் ஒற்றை யானை வனச்சாலையில் உலா வந்தது.

தாமரைக்கரையில் இருந்து பெஜலட்டி செல்லும் ரோட்டில் ஈரெட்டி என்ற பகுதியில் நின்றிருந்த யானையை நான்கு சக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பர்கூர் வனத்துறையினர் இரவு நேரங்களில் வனச்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் வன விலங்குகளான யானை, சிறுத்தை,கரடி உள்ளிட்டவைகள் இரவு நேரத்தில் வனச்சாலைகளில் உலா வருகின்றன. எனவே இவைகள் தாக்கும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : Anthiyur ,Bargur ,Erode district ,Tamil Nadu-Karnataka border ,Thattakarai forest ,Elephants ,Thamaraikarai ,Ereddy ,Bargur forest reserve ,
× RELATED பூமியை நோக்கி வருகிறது வால் நட்சத்திரம்