×

சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது

பாலக்காடு, டிச. 22: பிச்சளமுண்டா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறித்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பாலக்காடு மாவட்டம் பிச்சளமுண்டா பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து மன்னார்க்காடு வனத்துறை அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிச்சளமுண்டா வாக்கோடன் தனியார் தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் கேமராவில் பதிவானது. பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

 

Tags : Palakkad ,Pichalamunda ,Palakkad district ,
× RELATED பூமியை நோக்கி வருகிறது வால் நட்சத்திரம்