கோவை, டிச. 16: கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் ரோட்டில் புதிய சோதனைசாவடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா வசதியுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். இங்கு 24 மணி நேரமும் 2 போலீசார் சுழற்சி முறையில் நேற்று முதல் பணியில் ஈடுபட தொடங்கினர். திறப்பு விழா நிகழ்ச்சியில் தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் போத்தனூர் சரக உதவி கமிஷனர் கனக சபாபாதி, போத்தனூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
