அரியானாவில் லேசான நிலநடுக்கம்

புதுடெல்லி: அரியானா மாநிலம் ரோஹ்தக் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 12.13 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவானது. இது ரோஹ்தக்கில் 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கம் டெல்லியின் சில இடங்களிலும் உணரப்பட்டது.

Related Stories: