ஐ.நா: வடஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையே 2023ம் ஆண்டு முதல் நீடிக்கும் போரில் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். இதனால் அங்கு அமைதியை நிலைநாட்ட, மனிதாபிமான உதவிகளுக்காக ஐநா அமைதி படை இயங்கி வருகிறது. இதில் ஐநா அமைதி படையில் இருந்த வங்கதேச வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு சூடானில் ஐநா அமைதி காக்கும் பணியில் இருந்த ஐநா மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவலில் உயிரிழந்தார். மேலும், ஐநா அமைதி வீரர்கள் 10 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
