ராஞ்சி: ஜார்க்கண்டில் ரயிலில் இளம் பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டில் உள்ள டட்டிசில்வாய் என்ற ரயில் நிலையத்தில் ராணுவத்திற்கான சிறப்பு ரயில் வந்துள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 42 வயது ராணுவ வீரர் ரயிலுக்கு காத்து நின்ற 22 வயது இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று ரயிலில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் சத்தம் போடவே ரயில் நிலையத்தில் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராணுவ வீரர் தப்பி ஓட முயன்றார். அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
