×

டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: குளிர்காலத்தையொட்டி, இந்த ஆண்டு வடமாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக கடும் பனி பொழிந்து வருகிறது. காஷ்மீரில் புல்வாமா பகுதியில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 3.2 டிகிரி செல்சியாக கடும் குளிர் நிலவுகிறது. இமாச்சல பிரதேசத்தில் லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் உள்ள குகும்சேரியில் இரவில் மைனஸ் 5.7 டிகிரி செல்சியஸுடன் மிக கடுமையான குளிர் நிலவியது. தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தின் மிக அதிக குளிர் நாளாக நேற்று 16.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடும் குளிர், காற்று மாசு காரணமாக 125க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உபி,பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதை முன்னிட்டு வடமாநிலங்களில் மட்டும் 150 விமானங்களும், 50க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

Tags : Delhi ,northern states ,New Delhi ,northern ,Pulwama ,Kashmir ,Lahaul ,Spiti ,Himachal Pradesh… ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...