கர்நாடகாவைத் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்கு எதிராக தெலங்கானாவிலும் சட்டம்

ஐதராபாத்: காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நாட்டின் முதல் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்டத்தை வியாழக்கிழமை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தகவலை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று அறிவித்தார்.அவர் கூறுகையில் ,’வெறுப்புப் பேச்சு தொடர்பாக நாங்கள் விரைவில் சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று கூறினார்.

Related Stories: