புதுடெல்லி: பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவருமான லாலு பிரசாத் யாதவ்(77) கண் பாதிப்பு காரணமாக அவதியுற்று வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று காலை கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
