மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!

டெல்லி: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மீது மோடி அரசு புல்டோசர் ஏற்றித் தகர்த்துள்ளது. விபி ஜி ராம் ஜி எனும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக போராடும். எதிர்க்கட்சிகள் உள்பட யாரிடமும் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல் 100 நாள் வேலைத்திட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. 100 நாள் திட்டத்தின் அடிப்படையை மாற்றி விவசாயிகள், ஏழை மக்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தியதில் காங்கிரஸுக்கு பெரும் பங்குள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories: