விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
