அரசு ஊழியர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள ஆலோசனை கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: