அறந்தாங்கி, டிச. 20: அறந்தாங்கி அருகே கீரமங்கலம் பேரூராட்சியில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பிரதிநிதி கணேசன், பேரூராட்சி நகர செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
