×

ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா

ராஜபாளையம், டிச. 20: ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோயிலில் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாலை அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு 308 திரவிய ஹோமம், 32 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை  மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் செய்திருந்தனர்.

Tags : Hanuman Jayanti festival ,Rajapalayam ,Ashtavaratha ,Adi Vida Vinayagar ,Temple ,Madurai Road ,Petthavanallur Mayuranath Swamy Temple ,Hanuman Jayanti… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா