- வில்லிபுத்தூர்
- தேசிய எரிசக்தி பாதுகாப்பு வாரம்
- வில்லிபுத்தூர் மின்சார வாரியம்
- நிர்வாக பொறியாளர்
- முனியசாமி கோடி…
வில்லிபுத்தூர், டிச.20: வில்லிபுத்தூரில் மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு வில்லிபுத்தூரில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை வில்லிபுத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் முனியசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் காலசாமி, கல்யாணி பாண்டியன், கருப்பசாமி மற்றும் முருகன், வத்திராயிருப்பு பகுதி அலுவலர் பாலசுப்பிரமணியம் உட்பட மின்வாரியத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ேதரடி தெரு பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் தேரடி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.
