×

பெரம்பலூர் அருகேலாரி மீது வேன் மோதி விபத்து: வேன் டிரைவர் பரிதாப பலி

பெரம்பலூர், டிச.20: விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் செல்வராஜ் (38). லாரி டிரைவரான இவர் நேற்று காலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்ருந்தார். காலை 7.30 மணி அளவில் இந்த லாரி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, வில்லிபுத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி புத்தாண்டு காலண்டர்களை ஏற்றி வந்த வேன் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வேன் டிரைர் வில்லிபுத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்திரமோகன் (28) என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் செல்வராஜிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Perambalur ,Selvaraj ,Krishnasamy ,Virudhunagar ,Madurai ,Chennai ,Trichy-Chennai ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...