×

கான்கிரீட் வீடு கட்டும் பணி தில்லையாடியில் கலெக்டர் ஆய்வு

தரங்கம்பாடி, டிச. 20: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் காந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மயிலாடுதுறை மாவ ட்ட ஆட்சியர் காந்த் தில்லையாடி கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வசதி திட்டத்தின்கீழ் ரூ.2லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் கான்கிரீட் வீடு கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்குறித்து கேட்டறிந்தார். மேலும் தில்லையாடியில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ் சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Dilaiadi ,Tharangampadi ,Mayladudhara District ,Governor Kant ,Thiladi-Uradchi, Mayladudhara District ,Mayiladuthura Mawata Aadsir Kant ,Thilaiadi Village ,
× RELATED மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்