திருப்பூர், டிச. 20: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதன்படி திருப்பூர் பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சிலைக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்களும் செய்யப்பட்டன. இந்த பூஜைகளில் திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவிநாசி: அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, திருச்சிகல்யாணராமனின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு சுவாமி திருவீதி உலாவின் போது கோதாமுத்து வாத்தியார் அவிநாசியப்பா நினைவு உடற்பயிற்சி சாலை மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
