முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருப்பூர், டிச. 17: திருப்பூர் காலேஜ் ரோட்டில் முருகன் கோயில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மார்கழி மாதம் 1ம் தேதி என்பதாலும், செவ்வாய்க்கிழமை என்பதாலும் முருகன் கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இதனால் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்துநின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெற்றது.

Related Stories: