×

முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் பீகாரில் இன்று பணியில் சேருகிறார்: அதிகாரிகள் தகவல்

பாட்னா: பீகாரில் முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் இன்று பீகாரில் பணியில் சேர உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 15ம் தேதி ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் நிதிஷ் குமார் பணி நியமன ஆணைகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது பணி நியமன ஆணையை வாங்க வந்த நஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணை தரும்போது, அவர் அணிந்திருந்த ஹிஜாபை முதல்வர் நிதிஷ் குமார் அகற்றினார். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இதனால் அதிருப்தியடைந்த நஸ்ரத் பர்வீனும், அவரது உறவினர்களும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும் பீகாரில் பணி சேர மறுப்பு தெரிவித்து விட்ட நஸ்ரத், மேற்குவங்கத்தில் பணியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நஸ்ரத் பர்வீன் இன்று பீகாரில் பணியில் சேர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Nusrat Parveen ,Chief Minister ,Bihar ,Patna ,AYUSH ,Nitish… ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா-ராகுல் விடுதலையை எதிர்த்து ஈடி அப்பீல்