தர்மபுரி, டிச.20: அரூர் எஸ்ஐ சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரூர் பேருந்து நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாலிபரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் தெரிவித்தர். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பாக்கெட்டில் 250 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அரூர் திருவிக நகரை சேர்ந்த பிரதீப் (22) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
