×

காலை பனிமூட்டம்… கரூர் பைபாஸ் சாலையில் கடும் பனிப்பொழிவு

கரூர், டிச. 19: வடகிழக்கு பருவமழை முடிவடைய 12 நாட்களே உள்ளன. ஆண்டின் சராசரியை மழையை பெற வடகிழக்கு பருவமழை அதிகளவு உதவி வருகிறது. ஆனால், இந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. மாறாக கடந்த இரண்டு வாரங்களாக கரூர் மாவட்டம் முழுதும் பனி பெய்ய துவங்கிவிட்டது.

அதிலும், கடந்த ஒரு வாரமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்படும் வகையில் அதிகாலை நேர பனிப்பொழிவு இருந்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை 12 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த நாட்களிலாவது கரூர் மாவட்ட அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், கரூர் மாநகராட்சியை சுற்றிலும் கருர் திருச்சி, கரூர் சேலம், கரூர் மதுரை, கரூர் கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கான பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலைகளில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

கடந்த ஒரு வாரமாக அதிகாலையில் நிலவும் இந்த பனிப்பொழிவு காரணமாக அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பனிப்பொழிவு பிப்ரவரி மாதம் வரை நிலவும் என்பதால் அனைத்து தரப்பினர்களும் பீதியில் உள்ளனர்

Tags : Karur Bypass Road ,Karur ,North-East ,South-West ,
× RELATED கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சித்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்