×

அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை

கரூர், டிச. 18: நிலத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள நிலத்தின் மேலாண்மை குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:
தொழு உரம் (ஏக்கருக்கு 12 டன்) அதிகளவில் இட வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரம் மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு 300 கிலோ இட வேண்டும். தக்கை பூண்டு, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரங்களை மடக்கி உழவு செய்ய வேண்டும். அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட், டிஏபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை பயன்படுத்திட வேண்டும்.

ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு கந்தக உரங்களை இட வேண்டும். நுண்ணுட்ட சத்துக்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இலை வழி தெளிக்க வேண்டும். அதிகளவு பாசன நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும. பயறு வகை பயிர்கள், பருத்தி, மாதுளை, கொய்யா, புளி, மிளகாய், முருங்கை போன்ற பயிர்களை பயிரிடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Agriculture Department ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்