×

மர்ம நபர்களுக்கு வலை கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா

கரூர், டிச.17: கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா இன்று தொடங்கிறது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக கொண்டாடவேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் இன்று முதல் டிச.26ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டம் வாரம் கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி கரூர் மாவட்டத்தின் அரசுப் பணியாளர்களுக்கு கணினித்தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆட்சிமொழித் திட்ட விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெறவுள்ளன. கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Official Language Act Week ,Karur District ,Karur ,Collector ,Thangavel ,
× RELATED செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் ரூ.27...