×

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கு காரணமாக இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது குமரிக்கடல் பகுதியில் இருந்து நகர்ந்து, நில நடுக்கோட்டுக்கும், இலங்கைக்கும் தெற்கில் நிலை கொண்டுள்ளது. சுமத்ரா தீவுப்பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு காற்று சுழற்சியுடன் இணையும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கடலோரப் பகுதியில் லேசான பனி மூட்டம் இருந்தாலும், உள் மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும். கர்நாடக எல்லையோர கேரள எல்லையோர மாவட்டங்களில் மூடுபனி இருக்கும், அங்கு மேகமாகவும் மழையாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே இலங்கையின் தெற்குப்பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேகம் இல்லாத பனிப்பொழிவில் காற்று நுழைந்தால் உறைபனியாக மாறும் வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில், இலங்கையில் ஏற்படும் மேக உருவாக்கம் காரணமாக 25ம் தேதியில் மேகமூட்டம் மற்றும் குளிர் பனியும் 27ம் தேதி வரை நீடிக்கும். இரண்டு நாட்கள் உறை பனிக்கும் இருக்கும் நிலை மாறி உறைபனி விலகி குளிர் காற்றுடன் மேகமூட்டம் ஏற்பட்டு 28ம் தேதியில் மாலை இரவு நேரங்களில் மழை பெய்யும். தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரையில் வறண்ட வானிலை நிலவும், அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் நிலவும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

Tags : Tamil Nadu ,Chennai ,Kumarikdal region ,Sri Lanka ,Sumatra ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் தனி...