விஜய் கூட்ட நெரிசல் பலி 2 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில், 2 டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், 2 டிஎஸ்பிக்கள், 4 போலீசார் நேற்று காலை 11 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்கள், சம்பவம் தொடர்பான முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து, தனியார் யூடியூப் சேனல் நிறுவனத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் சிபிஐ முன் ஆஜராகினர். அவர்கள் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் டிரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

Related Stories: