சென்னை: நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தில் தனிப்பெரும் ஆளுமை நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பெரியார் மாணவராக, அண்ணா தம்பியாக, கலைஞரின் உயிர்த்தோழராக கட்சி வளர்த்து தமிழினத்துக்கு தொண்டாற்றியவர். பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாளில், அவரது புகழைப் போற்றுவோம் என்று கூறியுள்ளார்.
