×

ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும் என இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

*ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்.

* இதன்படி, காலை 5:00 மணி – மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கே அட்டவணை தயாரிக்கப்படும்.

*இதர ரயில்களுக்கு அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன்பே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.

*கடந்த ஜூலையில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

*கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமத்தை சந்திப்பதால் நடவடிக்கை வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளை பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி கீழ்கண்ட வழிகளில் தங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் செக் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று சரிபார்க்கலாம். உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Railways ,Delhi ,
× RELATED தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பாக...