×

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!

 

சென்னை: சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (17.12.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு (Law Interns) பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார்.

மேலும், எந்த நேரத்திலும், இருந்த இடத்தில் இருந்தவாரே, தங்களது பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக சட்டத்துறையில் பணியாற்றும் 11 அரசு சார்புச் செயலாளர்களுக்கு 11 “மடிக்கணினிகளையும்” அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், கூடுதல் செயலாளர்கள் முனைவர் கு. மகேஷ் குமார், ப. அன்புச் சோழன் மற்றும் சட்டத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Law Duraimurugan ,Chennai Chief Secretariat ,
× RELATED படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும்...