நீலகிரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். hidden spots என்ற குறி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதைபோல் hidden spots பாதுகாப்பு இல்லாத வனப்பகுதி என்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் நீலகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என வனத்துறை தெரிவித்துள்ளது.
