வந்தாராவில் வனவிலங்குகளை பார்வையிட்ட மெஸ்ஸி: சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என பெயர் சூட்டல்

குஜராத்: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது ‘GOAT டூர்’ பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தார்.

அந்த வகையில், ஜாம் நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்திற்கு தனது சக வீரர்களான இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் உள்ளிட்டோருடன் வருகை தந்த மெஸ்ஸிக்கு நாட்டுப்புற இசையுடன், மலர்கள் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வந்தாராவில் உள்ள கோயிலில் நடத்தப்பட்ட மகா ஆரத்தியில் மெஸ்ஸி பங்கேற்றார். மெஸ்ஸியின் வருகைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி இணைந்து ஒரு குட்டி சிங்கக்குட்டிக்கு லியோனல் என பெயரிட்டனர்.

Related Stories: