- காங்கயம் மடவிளாகம்
- காங்கேயம்
- காங்கயம் கோட்ட மின்சார வாரியம்
- பல்லடம் மின்சார விநியோகக் கழகம்
- காங்கயம் பிரிவு
- தாராபுரம்
- வத்தமலை
- கோயம்புத்தூர்
- கடையூர்
- திருப்பூர் சாலை
- சிவன்மலை
- Padiyur
- கரூர்...
காங்கயம், டிச. 17: பல்லடம் மின் பகிர்மான கழகத்தின் கீழ் காங்கயம் கோட்டம் மின்வாரியம் செயல்பட்டு வருகிறது. காங்கயம் கோட்டத்தில் காங்கயம் நகரம், தாராபுரம் சாலையில் வட்டமலை வரை, கோவை சாலையில் காடையூர் வரை, திருப்பூர் ரோடு, சிவன்மலை, படியூர், கரூர் சாலையில் ஓலப்பாளையம் வரை மற்றும் பழைய கோட்டை சாலை, நத்தக்காடையூர், பாப்பினி, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1.60 லட்சம் மின் பயனீட்டாளர்களுக்கு 175 மெகாவாட் மின்சாரம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தாராபுரம் சாலை துணை மின்நிலையம், பழையகோட்டை துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தாழ்வு மின்னழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் மின் பயனீட்டாளர்களுக்கு உரிய மின் சாரம் வழங்க கூடுதலாக தமிழ்நாடு மின்வாரிய கழகத்தின் சார்பில் காங்கயம் அடுத்த மடவிளாகம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி ரூ.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. 110/11 கே.வி. மின் உற்பத்தி செய்யப்படும் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பாப்பினி, பச்சாபாளையம், நத்தக்காடையூர், பழையக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் சில ஊர்களுக்கும் உரிய மின்சாரம் தொய்வின்றி வழங்கப்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
