×

காங்கயம் வெள்ளகோவிலில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை கூட்டம்

காங்கயம்,டிச.16: காங்கயம் சட்டமன்றத்தொகுதி காங்கயம் மற்றும் வெள்ளகோவில் நகர திமுக சார்பில் ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி; தமிழ்நாடு தலைகுனியாது’’ என்னும் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. காங்கயம் நகரம் தாரபுரம் ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்சிக்கு நகரச்செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில் திமுக சாதனைகள், செயல் திட்டம் பற்றியும் மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் வார்டு செயலாளர் வெள்ளியங்கிரி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அனிதா வரதராஜ், பாகநிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில் நகரத்திற்கு உட்பட்ட உப்புபாளையம் ரோடு, ராசி மஹால் மற்றும் மஞ்சள் துண்டு மஹாலில் நடைபெற்று பின்பு வீடு,வீடாக சென்று அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்குமார், நகரக் செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கனியரசி, நகர்மன்ற உறுப்பினர்கள் சேகர், வைகை. கே.மணி, சிட்டி. ஜி.பிரபு உள்பட உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Nadu will not bow ,Kangayam Vellakovil ,Kangayam ,polling ,Vellakovil ,DMK ,Dharapuram Road ,City Secretary ,Vasantham Na.Semalaiyappan… ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் 26வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து