×

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. டிச.19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Tags : Tamil Nadu ,Chennai ,Election Commission of India ,Special Intensive Revision ,SIR ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...