×

ஐபிஎல் மினி ஏலம் : ஜடேஜாவிற்கு மாற்றாக ரூ.14.20 கோடிக்கு ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை தட்டி தூக்கிய சிஎஸ்கே அணி!!

ஐபில் மினி ஏலம் : ஜடேஜாவிற்கு மாற்றாக ரூ..14.20 கோடிக்கு ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை தட்டி தூக்கிய சிஎஸ்கே அணி!!

அபுதாபி : ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களை அணிகளுக்கு தேர்ந்தெடுக்கும் வகையில் அபுதாபியில் மினி ஏலம் தொடங்கியது. 10 அணிகள் 77 வீரர்களை ஏலம் எடுக்கலாம், 240 இந்தியர்கள் உள்பட 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

*ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரரே ஏலம் போகவில்லை. முதல் வீரராக ஏலத்தில் ஆஸ்திரலிய அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேஸர் மெக்கரிக் ஏலம் விடப்பட்டார். அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கேட்கப்பட்ட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் அன்சோல்ட் ஆனார். ஜேக் ஃப்ரேஸர் கடந்த சீஸனில் டெல்லி அணிக்கு ஓப்பனிங் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை அடிப்படை ஏலம் விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக மில்லர் விளையாடி வந்தார்.

*ஐபிஎல் மினி ஏலத்தில் பர்தீவ் ஷா மற்றும் கான்வே ஆகியோரை எந்த வீரரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீரர் கேம்ரூன் கீரினை ரூ.25.20 கோடிக்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் கேம்ரூன் கீரினுக்கு போட்டியிட்டன. 14 கோடி ரூபாயில் உள்நுழைந்த சிஎஸ்கே 22 கோடி ரூபாய் வரை போட்டி போட்டது. ஆனால் இறுதியாக கேகேஆர் அணி கேம்ரூன் கீரினை ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

*ஐபிஎல் மினி ஏலத்தில் இந்திய வீரர் சர்ஃபராஸ் கான், இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் வியான் முல்டர் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த ரச்சின் ரவீந்தர தற்போது எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை அடிப்படை ஏலத்தொகையான ரூ.2 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

*இந்திய ஆல்ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயரை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

*தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் டி-காக்கை மும்பை அணி அடிப்படை ஏலத்தொகையான ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டி-காக் சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. விக்கெட் கீப்பர்களுக்கு ஏலத்தில் இந்திய வீரர் பரத்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் டக்கெட்டை டெல்லி அணி அடிப்படை ஏலம் தொகையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

*நியூசிலாந்து அணி வீரரை ஃபின் ஏலனை கேகேஆர் அணி அடிப்படை ஏலத் தொகையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

*அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டனை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் அவர் விற்கப்படாத வீரராக அறிவிக்கப்பட்டார். அடுத்த சுற்றுகளில் அவர் மீண்டும் ஏலத்தில் விட வாய்ப்புள்ளது.

*ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜானி பேரிஸ்டோவ், ஜேமி சுமித், தீபக் ஹூடா உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில் ஜேக்கப் டஃபியை ஆர்சிபி அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

*இலங்கை வீரரும் சிஎஸ்கே முன்னாள் வீரருமான மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது.

*மாட் ஹென்றி, ஆகாஷ் தீப், ஜெரால்ட் கோட்ஸி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ராகுல் சஹர், ஸ்பென்சர் ஜான்சன், ஷிவம் மாவி ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை.

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை ராஜஸ்தான் அணி ரூ.7.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

*மேற்கிந்திய சுழற்பந்து வீச்சாளர் அகில் உசேனை (Akeal Hosein) அடிப்படை ஏலத் தொகையான ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே முதல் வீரர் இவர்தான்

*இந்திய கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி தர் ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிட்ல்ஸ் அணி. அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.8.4 கோடிக்கு ஆகிப் நபி தர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

*இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் விஜய் சங்கரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியில் விளையாடிய விஜய் சங்கர் Unsold பிளேயராக தற்போது உள்ளார்.

*இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில எடுத்துள்ளது. இடதுக்கை வீரரான பிரஷாந்த் வீர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவார். ஜடேஜாவிற்கு மாற்றாக இவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

*தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் அன்ரிச் நார்ட்ஜே ரூ. 2 கோடிக்கு விலைக்கு வாங்கியது லக்னோ அணி.

*சன்வீர் சிங், கமலேஷ் நாகர்கோடி, தனுஷ் கோட்யான், ஈதென் டாம், மஹிபால் லோம்ரோர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆர்ய தேசாய், யாஷ் துல், அபினவ் மனோகர், அபினவ் தேஜ்ரானா, அன்மோல்ப்ரீத் சிங், அதர்வ டைடே, முஜீப் ரஹ்மான் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் ஏலம் போகவில்லை.

*மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த UNCAPPED வீரர் சிவாங் குமாரை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

*19 வயது இளம் வீரரான விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவை 14.20 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

*ஐபிஎல் மினி ஏலத்தில் ராஜஸ்தான் கிரிக்கெட் வீரர் முகுல் சவுத்ரியை 2.60 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது லக்னோ அணி .

*தேஜஸ்வி சிங்கை ஏலத்தில் எடுக்க கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அடிப்படை ஏலத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.3 கோடி வரை சென்றது. இறுதியாக கேகேஆர் அணி ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

*வான்ஷ் பேடி,துஷார் ரஹேஜா, ராஜ் லிம்பணி,சிமர்ஜீத் சிங், ஆகாஷ் மத்வால் ஆகியோரை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

*அன்கேப் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மாவை ரூ.90 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது.

*வேகப்பந்து வீச்சாளர் கார்த்தி தியாகியை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

*இளம் வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரியை ரூ.1 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி போட்டி போட்ட நிலையில் லக்னோ ரமன் திவாரியை ஏலத்தில் எடுத்தது.

*அன்கேப் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில் கர்ண் ஷர்மா, குமார் காத்திகேயா சிங், ஷிவம் சுக்லா உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

*அன்கேப் சுழற்பந்து வீச்சாளர்களில் பிரசாந்த் சுலான்கியை கொல்கத்தா ரூ.30 லட்சத்திற்கும் யாஷ் ராஜ் புஜ்னாவை ரூ.30 லட்சத்திற்கும் மற்றும் விக்ணேஷ் புதூரை ரூ.30 லட்சத்திற்கும் ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

*இந்திய கிரிக்கெட் வீரர் சுஷாந்த் மிஸ்ராவை ரூ. 90 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

Tags : IPL ,CSK TEAM ,JADEJA ,IPIL ,CSK ,Abu Dhabi ,
× RELATED தர்காவுக்கு சொந்தமான படி பாதையில்...