வேப்பமூடு பூங்காவில் புதிதாக வரையப்பட்ட ஓவியம் பெயிண்ட் ஊற்றி அழிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இதில் வேப்பமூடு பூங்கா நகரின் மையப்பகுதியில் உள்ளதால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அதுபோல் வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை பூங்கா வளாகத்திற்குள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு செல்லும் வகையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காலை முதல் இரவு நேரம் வரை வேப்பமூடு பூங்கா பரபரப்பாகவே இருந்து வருகிறது. இந்த பூங்காவிற்குள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறிய வகையிலான கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், அறிவியலுடன் ஒத்துபோகும் விளையாட்டு பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விளக்கங்கள் அந்த விளையாட்டு உபகரணங்கள் அருகே வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் பூங்காவின் நுழைவாயிலில் உள்ள டைனோசர் சிலைக்கு வண்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. மேலும் ரூ.9 லட்சம் செலவில் பூங்கா முழுவதும் அலங்கார அழகு செடிகள் மற்றும் செயற்கை புற்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவின் உள்ளே செல்பி பாயிண்ட் மற்றும் அங்குள்ள கட்டிடங்களில் வனவிலங்குகள் ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இதில் குதிரை, குரங்கு, டால்பின், புலி போன்ற விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறப்படவில்லை.

தொடர்ந்து ஓவியம் வரையப்பட்டு வரும் நிலையில் யாரோ மர்ம நபர் பூங்காவிற்குள் வந்து, அங்கு ஓவியம் வரைய வைக்கப்பட்டு இருந்த பெயிண்டை எடுத்து, டால்பின் ஓவியம் வரைந்த சுவற்றில் ஊற்றியுள்ளனர். இதனால் ஓவியம் சேதமடைந்துள்ளது.

பெயிண்ட் ஊற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஓவியம் வரை ஓவியர்கள் முடிவு செய்துள்ளனர். பூங்காவில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தாமலும், அழகை கெடுக்காமலும் பொதுமக்கள்தான் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: