திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுவர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மோகித் என்ற மாணவன் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தான்.
