சென்னை: சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும். துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் பல மணி நேரம் தாமதம். நிர்வாக காரணத்தால் தாமதம் என்று அறிவித்தாலும் விமானிகள், பொறியாளர் இல்லாததால் விமானங்கள் தாமதம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
