×

டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து: 4 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : Delhi-Agra Expressway ,Delhi ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது