கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி

கரூர், டிச. 16: கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இவ்வாண்டு கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியை மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ பேட்டிங் செய்து போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் கரூரிலிருந்து சுமார் 100க்கும் அதிகமான அணிகள் கலந்து கொண்டுள்ளன. அனைத்துப் போட்டிகளும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. போட்டிகள் இம்மாதம் 21ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் முதல் பரிசு ரூ.75,000, இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.25,000, நான்காம் பரிசு ரூ.25,000த்துடன் கோப்பைகள் வழங்கப்படும். சிறந்த பேட்ஸ்மேன் ரூ.10,000, சிறந்த பந்துவீச்சாளர் ரூ.10,000, சிறந்த ஆல்ரவுண்டர் ரூ.10,000 என மொத்த பரிசு தொகையாக ரூ. 2,05,000 வழங்கப்பட உள்ளது. அனைத்து பரிசுகளையும் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழக்குகிறார்.

தொடக்க விழாவில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மண்டல தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, சக்திவேல், பகுதி கழக பொறுப்பாளர்கள் வக்கீல் சுப்பிரமணியன் ஆர்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமார், வெங்கமேடு பாண்டியன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கோயம்பள்ளி பாஸ்கரன், வி.கே.வேலுசாமி, பி.முத்துக்குமாரசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர்காலனி செந்தில், விளையாட்டு அணி அமைப்பாளர் விக்னேஸ்வரன், பகுதிகழக விளையாட்டு அணி அமைப்பாளர்கள் மாயவன், ஆலயம் ரமேஷ், தொழிலாளர் அணி நவலடி பாலாஜி, பகுதி கழக வர்த்தக அணி அமைப்பாளர் அழகர்சாமி, இந்திய முன்னாள் முன்னாள் தலைவர் வாங்கல் பாலமுருகன், இளைஞர் அணி ஜிம் பாலாஜி, கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கரூர் மாவட்டத்திலிருந்து சுமார் 100க்கும் அதிகமான கிரிக்கெட் அணிகள் விளையாட்டில் பங்கு பெற பதிவு செய்தனர். ஒவ்வொரு அணிக்கும் தலா 12 ஓவர் பந்து வீசப்படுகிறது. போட்டிகளையும் கரூர் மாவட்ட மற்றும் மாநகர நகராட்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் நேரடியாக கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றனர்.

Related Stories: