×

பந்தலூர் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் தீ விபத்து

பந்தலூர், டிச.16: பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகியது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக இருந்து வரும் பாபு (30) 5 பாடி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் நடைபெற்ற சர்ச் திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றார்.

அப்போது, பாபு வீட்டில் தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த துணிமணிகள், பள்ளி சான்றிதழ்கள்,வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி கொழுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர். தகவலறிந்த தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வேறு குடியிருப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி மற்றும் விஏஓ மாரிமுத்து உள்ளிட்டோர் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Tags : Pandalur ,Mangorange ,Babu ,Nilgiris district ,
× RELATED பூங்கா நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் செடிகள் கொண்டு அலங்காரம்