×

வரும் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆட்சிமொழி சட்டவார நிகழ்ச்சிகள் துவக்கம்

ஊட்டி, டிச.15:தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்ற பெற்ற 27.12.1956ம் நாளை நினைவு கூறும் வகையில் வரும் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழி சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழி சட்டம், வரலாறு குறித்தும் பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சியளிக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சிமொழி சட்ட வாரத்தினை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags : Official Language Week ,Ooty ,Tamil Development Department ,Nilgiris district ,
× RELATED ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்