×

மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்

கோவை, டிச. 16: மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நகர்புற மற்றும் கிராம ஊராட்சியில் உள்ள இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை நல்வழிபடுத்தவும், அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திடவும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 363 விளையாட்டு உபகரணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என மொத்தம் 45 ஊராட்சிகளுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் என 811 வார்டுகளுக்கு 1209 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கோவையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் மற்றும் உள்ளாட்சி அமைகப்புக்களின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags : Kalaignar ,Coimbatore ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED போத்தனூர் செட்டிப்பாளையம் ரோட்டில் புதிய சோதனைசாவடி திறப்பு