கோவை,டிச.15: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த பொறியாளர்களின் நினைவாக 10-ம் ஆண்டு ரத்த தானம் முகாம் மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலம் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் டாடாபாத்தில் நேற்று நடந்தது.
இந்த முகாமை கோவை மண்டல தலைமை பொறியாளர் சுரேஷ்குமார் துவங்கி வைத்தார். இதில், மேற்பார்வை பொறியாளர்கள் குணவர்த்தினி, சதீஷ்குமார், சுப்பிரமணி, சாந்தநாயகி, நீலகிரி வசந்த முரளி, செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 52 பேர் ரத்த தானம் செய்தனர்.
இதில், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் கமல் குமார்,பொறியாளர் சங்கத்தின் கோவை கிளை பொறுப்பாளர்கள், குமாரவேலு, கார்த்திகேயன்,ஞானசேகரன், கதிர்வேல், பெருமாள், ஞான பிரகாஷ், ஸ்ரீராம்,கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் உமா மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், முகாமில் தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள், மின்சார வாரிய பொறியாளர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
