பாங்காக், டிச.16: தாய்லாந்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி பொது தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமராக உள்ள அனுதின் சர்ன்விரக்குல் கடந்த செப்டம்பரில் பதவியேற்றார். கம்போடியாவுடன் மீண்டும் போர் நடந்து வரும் சூழலில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் கட்சி நாட்டின் அரசியலமைப்பை மாற்றக் கோரி அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது. இது போன்ற அரசியல் சூழ்நிலையால், பிரதமர் அனுதின் நாட்டின் நாடாளுமன்றத்தை கடந்த வாரம் கலைத்தார். நாடாளுமன்றம் கலைப்புக்கு மன்னர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 8ம் தேதி பொது தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
