27ல் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம்

சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களையும் அவ்வப்போது சீமான் அறிவித்து வருகிறார். இதனிடையே சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் 27ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாதக தலைமை வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, திருவேற்காடு ஜி.பி.என்.பேலஸ் அரங்கில் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: