மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் ஒன்றிய அரசு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

ஊட்டி: ஊட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வன நிலங்களில் வாழும் அனைவருக்கும் 2006 வன உரிமை சட்டத்தை பயன்படுத்தி பட்டா வழங்க வேண்டும். ஒன்றிய அரசு சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவையை கூட்டி நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தை மாற்றி உள்ளனர். அதே போல வன உரிமை சட்டத்தை மாற்றினால் தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கபடுவார்கள்.ஒன்றிய பாஜ அரசு மக்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றுவது, மக்களுக்கு சாதகமான சட்டங்களை திருத்துவது என்ற மிக மோசமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார்கள். இவ்வாறு சண்முகம் கூறினார்.

Related Stories: